மட்டக்களப்பில் திருட முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்
மட்டக்களப்பு (Batticaloa) - திருப்பெரும்துறை வீதியிலுள்ள கொத்துக்குளம் பகுதியில் மின்சார கம்பிகளை திருட முற்பட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (06) காலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் மின்சார சபையினால் அதிஉயர்வான 3300 சக்தி மின்சாரத்தை சீராக்கி கட்டுப்படுத்தி பாவனையாளர்களுக்கு அனுப்பும் கட்டிட பகுதியில் இந்த இளைஞன் மின்சார கம்பிகளை திருட முற்பட்டுள்ளார்.
சிகிச்சை
இதன்போது, மின்சாரம் தாக்கி கீழே வீழ்ந்து படுகாயங்களுடன் இளைஞன் ஒருவர் கிடைப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயங்களுடன் கிடந்த இளைஞனை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், வெட்டப்பட்ட மின்சார கம்பிகள் மற்றும் வெட்டுவதற்கான ஆயுதங்கள், துவிச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri