மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்
மாத்தளை மாவட்டத்தில் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக லக்கல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த கிடைத்துள்ளது.
உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு
உயிரிழந்தவர் மா ஓய, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.