தேன் எடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்: திருகோணமலையில் துயரம்
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டுப் பகுதிக்கு சென்ற மூவர்
கந்தளாய் காட்டுப் பகுதிக்கு தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றுள்ளனர்.

இதன்போது யானை ஒன்று அவர்களை தாக்க முற்பட்டபோது மூவரும் வெவ்வேறாகப் பிரிந்து ஓடியுள்ள நிலையில் அதில் ஒருவரை யானை தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மொரவெவ பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து காட்டுப் பகுதிக்குச் சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யானையின் தாக்குதலில் ஹெல்லென - மித்தெனிய பகுதியைச் சேர்ந்த ஜீ.எம்.ரஞ்சித் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
    
    மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
 
    
    34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        