வெளிநாடு செல்ல காத்திருந்த இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி
கொழும்பில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பாரிய மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான முறையில் ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 38 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி ராஜகிரியவின் மொரகஸ்முல்லவில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்த நடவடிக்கையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகளை போலியான முறையில் தயாரித்து மோசடிகள் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை
கைது செய்யப்பட்டபோது, போலி கடிதத் தலைப்புகள், பாடத்திட்ட வாழ்க்கைச் சான்றிதழ், கடவுச்சீட்டுக்களின் பிரதிகள் மற்றும் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களை அதிகாரிகள் மீட்டனர்.

பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், நேற்று முன்தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan