யாழில் காலாவதியான பிஸ்கெட்டை விற்பனை செய்ய முயன்றவருக்கு தண்டம்
யாழ்ப்பாணம்- அச்சுவேலி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது பல்பொருள் அங்காடி ஒன்றில் காலாவதியான பிஸ்கட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தண்டம்
வழக்கு விசாரணையின் போது வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

அதேவேளை , கடந்த வாரமும் அச்சுவேலி பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அச்சுவேலி பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து உணவு கையாளும் நிலையங்கள் , பல்பொருள் அங்காடிகள் என்பவற்றில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam