நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைதான கைவாறு முத்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
ஷார்ஜாவில் கைது செய்யப்பட்ட மனோஜ் முத்துகுமார எனப்படும் கைவாறு முத்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் துறையினரால் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
மேலதிக விசாரணைகளுக்காக அவர் மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் கப்பம் கோருதல் உட்பட பல திட்டமிடப்பட்ட குற்றங்களை வழிநடத்தியதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சமயன் என்பவரின் பிரதான உதவியாளராகவும் அறியப்படுகிறார். அத்துடன், அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டின் முன்னால் இரங்கல் மலர் வளையம் வைத்தமை தொடர்பிலும் சந்தேக நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.