காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!
மகாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகமுயாய, பொல்கஸ்தலாவ காப்புக்காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(15.4.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உணுவதுர புபுல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மேற்படி நபர் காப்புக்காட்டுப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த தனது கால்நடைகளைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri