குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியதும் கோபப்பட்ட பிள்ளையான்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தாம் உரையாற்றிய போது அதற்கு பிள்ளையான் மிகப் பெரிய எதிர்வினை ஆற்றியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குண்டுத்தாக்குதலின் போது பெரியோர், சிறியவர்கள் என பலர் உயிரிழந்திருந்ததுடன்,காயமும் அடைந்திருந்தனர்.இது ஒரு மிகக் கொடூரமான செயற்பாடு.
அதற்கப்பால் சொல்லப்பட்ட காரணம் ஒரு ஆட்சியைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சி என்றால் அப்பாவி மக்களைப் பலி கொடுத்து இவ்வாறு செய்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம்.
இதில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி, சுரேஸ் சலே சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி, வேறு எவர் தொடர்புபட்டு இருந்தாலும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri