தமிழர் பகுதியில் வீடு புகுந்து கொடூரத் தாக்குதல் : இரு பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25இற்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம்(16.07.2026) மாலை இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத் தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam