மன்னாரில் குடும்பஸ்தரை காணவில்லை என முறைப்பாடு
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிறில் என அழைக்கப்படும் அந்தோணி றெமி (வயது 48 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அவரது சகோதரியினால் இன்றையதினம்(16.4.2026) முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு
நேற்றைய தினம்(15) காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரிந்தவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையம் அல்லது அவரது உறவினர்களின் தொலைபேசி இலக்கத்துடன் (0770699042) தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam