STFஆல் துரத்தப்பட்ட நபர் குழியில் விழுந்து பலி
கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விவகாரத்தில், சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்ய சென்ற நபர் ஒருவர் குழியில் விழுந்து பலியான விடயம் பேசுபொருளாகியுள்ளது.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24ஆம் திகதி இரவு 6.30 மணி அளவில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக சிறப்பு அதிரடிப்படையதற்கு தகவல் கிடைத்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
அதற்கமைய, இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 6ஆம் யூனிட் இராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோதமாக முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர், தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, குறித்த சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri