கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்!
கொழும்பு - ஹொரண வீதியின் பொகுணுவிட்ட சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(10.4.2026) இடம்பெற்றுள்ளது.
நேற்று ஹொரண நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழப்பு
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், அதன் பின்னால் அமர்ந்து பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பின்னால் அமர்ந்து பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர் கிரிஎல்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam