மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - கைதானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு
மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் (10.04.2026) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
இதன்போது கடத்தல், கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களையும், இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றில் விசாரணை
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புறப்பட்ட ஈரானிய தூதுக்குழுவினர்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்
எனினும் குறித்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் மட்டுமே நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டதுடன், ஏனையவர்கள் நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நிகழ்நிலை ஊடாக விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது குறித்த வழக்கின் சந்தேகநபர்களான ஆறு பேரையும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளதுடன், இது தொடர்பான அடுத்த வழக்கு விசாரணை இம்மாதம் 15ஆம் திகதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.








கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam