மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் நபரொருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(23.5.2026) இடம்பெற்றுள்ளது.
கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பொலிஸ் நியை பொலிஸாரால் நேற்று (22) இரவு 8.00 மணியளவில் 1500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ தினமான இன்று அதிகாலை 4.30 மணியளவில் உடல் நலக்குறைவால் சிறைக்கூடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நீதிமன்ற உத்தவை பெறும் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan