ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி!பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
ருமேனியாவில் வேலை வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர்களை ஏமாற்றிய சந்தேகநபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், குறைந்தது 750 நபர்களை ஏமாற்றி கிட்டத்தட்ட ரூ. 920 மில்லியனை மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையும் வர்த்தகக் குற்றப் பிரிவும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மோசடி
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், ஹோமகமவைச் சேர்ந்த 54 வயதான ஷெர்லி ஜெயவர்தன அமடோரு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த சந்தேகநபர் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்று விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 071-8594910 அல்லது 011-2444172 என்ற எண்களில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு! வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்
விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam