போர் மோதலுக்குப் பின்னர் இந்தியா வந்த பாகிஸ்தான் அமைச்சர்
2025 மே மாதப் போருக்குப் பின்னர் முதல் முறையாக, பாகிஸ்தான் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியா சென்றுள்ளார்.
பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக், நேற்று(20.11.2026) டெல்லி சென்றடைந்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா சென்றுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே தனிப்பட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை தொடர்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

2025 ஏப்ரலில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது.
அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ள நிலையில், பாகிஸ்தான் அதனை மறுத்தது.
இதற்கிடையில்,2027 ஆகஸ்டில் SCO உச்சி மாநாட்டை பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடத்தவுள்ளது. இதில் உயர் பிரதிநிதி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அமைச்சரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் உடனடி முன்னேற்றத்தைக் குறிக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என அரசியல் மற்றும் வெளியுறவு நிபுணர்கள் கருதுகின்றனர்.