இலங்கையில் மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்
பதுளை மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் மனைவியின் மோதிர விரலை தவிர ஏனைய 4 விரல்களையும் கணவன் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கணவன் தனது வலது கையின் நான்கு விரல்களையும் துண்டித்து, முகத்தையும் கழுத்தையும் கூரிய ஆயுதத்தால் வெட்டியதில் பலத்த காயமடைந்த பெண் பதுளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீகஹகிவுல அங்கலா உல்பத் கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குடும்ப தகராறு
குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவன் கந்தகெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துண்டாடப்பட்ட விரல்கள்
காயமடைந்த பெண்ணின் கையிலிருந்து வெட்டப்பட்ட விரல்களை பிரதேசவாசிகள் போத்தலில் வைத்தியசாலைக்கு கொண்டுவந்துள்ளனர்.

முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர், மீகஹகிவுல வைத்தியசாலை ஊழியர்கள் விரல்களுடன் பெண்ணை பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan