மின்கம்பத்தில் ஏறிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! மின்சார சபைக்கான நட்டத் தொகையை செலுத்த உத்தரவு
குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை , கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கே மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் தனது குடும்பத் தகராறு ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்காக குறித்த நபர் உயர் அழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சி.டி.விக்ரமரத்னவின் இறுதி நிமிடங்களில் இடப்பட்ட உத்தரவு.. ஒரு சில நிமிடங்களில் பிரிந்த உயிர்! உணர்ச்சிவசப்பட்ட 16 வருட கால விசுவாசி
நட்டத் தொகை
இதனால் திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெஹியந்தறை, மாவரல, தெனியான உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களைப் பொலிஸார் வரவழைத்து சமரச முயற்சிகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கினார்.

பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் 201,059.90 ரூபா எனப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து குறித்த அபராதத் தொகையை மின்சார சபைக்குச் செலுத்துமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri