கொழும்பு வைத்தியசாலையில் திருட்டு: தனியார் துப்புரவு நிறுவன பரிசோதகர் கைது
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பல்வேறு உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் தனியார் துப்புரவு நிறுவன பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இத் தகவலை வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் பாதுகாப்புப் பிரிவினர்
குறித்த திருட்டு சம்பவம், வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் உள்ளடக்கிய சீன அரசால் உருவாக்கப்பட்ட புதிய அடுக்குமாடி கட்டடத்திலேயே இடம்பெற்றுள்ளது.
மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையிலான விசாரணையின் போது
உரிய நபரை அடையாளம் காண முடிந்தது என்றும் வைத்தியசாலையின் பாதுகாப்புப்
பிரிவினர் தெரிவித்துள்ளார்.