யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம்(23) குடும்பஸ்தர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் பிள்ளைகளை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தவேளை ஒரு மோட்டார் சைக்கிளில், முகங்களை மறைத்தவாறு வந்த இருவர் குறித்த குடும்பஸ்தரின் கண்களினுள் மிளகாய் தூளினை வீசியுள்ளனர்.
ஆயுதத்தால் தாக்குதல்
அதன்பின்னர் அவர்மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam