விமான விபத்தில் தப்பியவர் கைது செய்யப்பட்டாரா..! குஜராத் பொலிஸார் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் அஹமதாபாத்தில் 270 பேரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்தின் போது, உயிர் பிழைத்தவரான விஸ்வாஸ் ரமேஸ் குமார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் அவர் பயணம் செய்யவில்லை என்றும், விமானத்தில் பயணித்ததாக பொய் கூறியதற்காகவே, அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், சமூக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.
இந்தநிலையில், குறித்த செய்தி பொய்யானது என்றும் விமானத்தில் பயணித்த நிலையில் விபத்தின் பின்னர், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சகோதரரின் இறுதிச்சடங்கு
அத்துடன், மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னரே, விமான விபத்தில் பலியான தமது சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam