மட்டக்களப்பில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!
மட்டக்களப்பு- வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(7.6.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சுவரணையடி பிரதேசத்தில் வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்டதுடன் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு, கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri