Whatsapp ஊடாக பெண்களுக்கு தொல்லை கொடுத்த நபர் கைது
இலங்கையில் Whatsapp வழியாக தகாத புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி பல பெண்களுக்கு தொல்லை கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் வடமத்திய மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்கும் நிலையத்திற்கு சென்றபோது, உரிமையாளர் அவர்களின் தொலைபேசி எண்களைப் பெற்று இவ்வாறு நடந்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விளக்கமறியலில்
அதற்கமைய, சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் அனுராதபுரம், பந்துலகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam