கேரளா கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றவர் கைது
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபரொருவரை இன்று கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு கஞ்சாவினை கொண்டு செல்லும் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
விமானப்படையினரின் புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படை பொறுப்பதிகாரி குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் என்.சீ. வீதியினூடாக மணிக்கூட்டு கோபுரம் பக்கமாக செல்லும் போது சோதனையிட்ட போது அவரிடமிருந்து 01 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- சமுத்ராகம ஓட்டை வீதியில் வசித்துவரும் துவான் ரஹீம் ஆப்தீன் (53 வயது) உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
