இங்கிலாந்துப் பெண்ணின் பயணப் பொதியை திருடிய நபர் கைது
இலங்கைக்கு (Sri Lanka) சுற்றுலா வந்த இங்கிலாந்துப் (England) பெண்ணின் பயணப் பொதி பேருந்தொன்றில் வைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த பயணப் பொதியிலிருந்த 20 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருடப்பட்ட கெமரா தொம்பே பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மடிக்கணினியின் கடவுச் சொல்லை அழிப்பதற்காக பேலியகொடை பிரதேசத்தில் நபரொருவருக்கு 5,000 ரூபாய் முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பொருட்கள் சந்தேக நபரிடம் காணப்பட்டதாகவும் புறக்கோட்டை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
