பேருந்தில் கசிப்பு கடத்த முற்பட்ட நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
வவுனியாவில் (Vavuniya) இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சூட்சுமமான முறையில் கசிப்பு கடத்த முற்பட்ட நபரை பேருந்தில் பயணித்த மக்கள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர், பயண பொதியில் எடுத்துச் சென்ற கசிப்பு பொதி உடைந்து கசிந்ததில் துர்நாற்றம் வீசியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதனை அடுத்து பரந்தன் பகுதியில் பேருந்தை நிறுத்தி, சட்டவிரோதமான முறையில் கசிப்பை பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபரை பரந்தன் பகுதியில் இருந்த வீதி போக்குவரத்து பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது, பொலிஸார், சந்தேக நபரையும் அவரால் கொண்டு வரப்பட்ட கசிப்பையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
