வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது குழப்ப நிலை : மேலும் இருவர் கைது
வவுனியாவில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டதையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் நேற்று(09) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்த வீதியில் நிற்பதை அவதானித்த வவுனியா பொலிசார் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதன்போது அவர் பொலிசாருடன் செல்ல மறுத்ததால் அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது. இருந்தபோதும், கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்ட போது அந்த பகுதியில் தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்ததுடன், அப் பகுதியில் தமது கடமைக்கு குழப்பம் விளைவித்தார்கள் என தெரிவித்து மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
