கட்டுநாயக்க விமான நிலையத்தில் 113.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய நபர்
113.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பெருமளவு குஷ் போதைப்பொருள் கையிருப்பை வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட இலங்கை பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், இன்று (06) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை
வெளியான தகவல்களின்படி, கொழும்பு, ஸ்லேவ் தீவில் வசிக்கும் 45 வயதான கூலித் தொழிலாளியான அந்த சந்தேக நபர், புது டில்லியிலிருந்து காலை 6:50 மணிக்கு வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பையில் சொக்லேட் உறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11.340 கிலோ குஷ் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பயணியும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! வெளியில் செல்வதில் அவதானம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்