புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து! சற்று முன் வெளியான அறிவிப்பு
இலங்கையில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.
இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
தட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை - இரட்டை இலக்க முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விடுமுறை முறைமை, நிலைமை வழமைக்குத் திரும்பியதும் நீக்கப்பட்டு, நாட்டின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை - இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் நேற்று (05.04.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA
எரிபொருள் விநியோகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்காக ஏப்ரல் மாதத்திற்குள் 9 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை.
மத்திய கிழக்கு போர் வெடித்ததன் பின்னர் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் ஏற்கனவே வெற்றிகரமாக நிர்வகித்துள்ளது.
தட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை - இரட்டை இலக்க முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன.

கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கம்
தற்போது எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளன. விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
அத்துடன் QR முறைமை தற்போது வினைத்திறனாகச் செயல்பட்டு வருவதாகவும், விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் இயல்பு நிலையை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam