மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA

Donald Trump United States of America Israel Iran Flight
By Shadhu Shanker Apr 06, 2026 01:55 AM GMT
Report

தென்மேற்கு ஈரான் மலைப்பகுதிகளில் எங்கோ மறைந்து இருந்த அமெரிக்க விமானப்படை வீரர் தொடர்பு கொண்டபோது, அவர் அனுப்பிய செய்தி மிகவும் குறுகியதும் எதிர்பாராததுமானதாலும், அது ஈரானின் சதி ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் Washington, D.C.இல் எழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதாவது அந்த வார்த்தைகள் ஒரு முஸ்லிம் சொல்வது போல இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

இரவோடு இரவாக ஈராக்- அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல்கள்! 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு அறிவிப்பு

இரவோடு இரவாக ஈராக்- அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல்கள்! 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு அறிவிப்பு

விசித்திரமான செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Axios ஊடகத்திற்கு தெரிவித்ததாவது, F-15E Strike Eagle விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த ஆயுத அமைப்பு அதிகாரி தனது ரேடியோவில் ஒரு சுருக்கமான, விசித்திரமான செய்தியை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விமான வீரர் Power be to God’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ரேடியோவில் சொன்னது, ஒரு முஸ்லிம் சொல்வது போலவே கேட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், அந்த அதிகாரியை நன்கு அறிந்தவர்கள், அவர் மதநம்பிக்கையுடன் இருந்தவர் என்பதால் இப்படிச் சொல்வது இயல்பானது என்று விளக்கினர். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஒரு அதிகாரியும் ட்ரம்ப் கூறியதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அவர் பயன்படுத்திய சரியான வார்த்தைகள் “God is good” என இருந்ததாக தெரிவித்தார். இதே வார்த்தைகளை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth, X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

எண்ணப்படும் ஈரானின் இறுதி நாட்கள் - இதுவே தாக்குலுக்கான நேரம்! ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி பதிவு..

எண்ணப்படும் ஈரானின் இறுதி நாட்கள் - இதுவே தாக்குலுக்கான நேரம்! ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி பதிவு..

மலைகளில் 48 மணி நேர போராட்டம்

அந்த விமான வீரரிடம் ஒரு தொடர்பு சாதனம், ஒரு டிராக்கிங் பீகன் மற்றும் ஒரு கைத் துப்பாக்கியும் இருந்தது.

அமெரிக்க மற்றும் ஈரான் படைகள் அவரைக் கண்டுபிடிக்க போட்டியிட்ட நிலையில், அவர் மலைச் சுரங்கங்களில் மறைந்து கொண்டு, தொடர்ந்து இடம் மாறிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில்7,000 அடி உயரமுள்ள மலைச்சரிவை ஏறியும், அவரைத் தேடி வந்த படைகளுக்கு முன்னிலையில் இருக்க முயன்றார்.

f15 pilot rescued

24 மணி நேரத்திற்கும் மேலாக, அவரது இருப்பிடம் அமெரிக்காவிற்கே தெரியாமல் இருந்தது. Central Intelligence Agency (CIA), “சிறப்பு திறன்களை” பயன்படுத்தி, மலைப்பகுதிகளில் நகர்ந்துகொண்டிருந்த அவரை கண்டறிந்ததாக The New York Times தெரிவித்துள்ளது.

அவரது துல்லியமான இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட்டதும், அந்த தகவல் வெள்ளை மாளிகை, Pentagon மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் பகிரப்பட்டது. பின்னர், சனிக்கிழமை இரவு ஒரு சிறப்பு படை குழு அந்த இடத்திற்கு அருகில் அனுப்பப்பட்டது.

24 மணிநேரத்தில் ஹோர்மூஸ் நீரிணையை கடந்த 15 கப்பல்கள்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

24 மணிநேரத்தில் ஹோர்மூஸ் நீரிணையை கடந்த 15 கப்பல்கள்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

முதல் நிகழ்வு

ஏப்ரல் 3 அன்று, இரட்டை இன்ஜின் கொண்ட F-15E Strike Eagle போர் விமானம், தென்மேற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானி உடனடியாக மீட்கப்பட்டார். ஆனால் ஆயுத அமைப்பு அதிகாரியை தேடும் பணிகள் இரண்டு நாட்கள் நீடித்தன.

மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA | Us F 15 Pilot Rescue Donald Trump Iran War

இந்த மீட்பு நடவடிக்கையை அறிவித்த ட்ரம்ப், Truth Social-ல், இந்த வீரர், எதிரிகளால் சூழப்பட்ட ஈரானின் ஆபத்தான மலைப்பகுதிகளில், எங்கள் எதிரிகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தார் என்று பதிவிட்டார்.

அந்த அதிகாரிக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் முழுமையாக குணமடைவார் என்று ட்ரம்ப் தெரிவித்தார். மீட்பு குழுவில் எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை.

மேலும் எதிரி நாட்டின் ஆழமான பகுதியிலிருந்து, இரண்டு அமெரிக்க விமானிகள் தனித்தனியாக மீட்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்றும் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை வர்ணித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US