இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
புதிய இணைப்பு
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (06) பிற்பகல் 3.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (07) வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் நிலவும் வெப்ப அலை, மனித உடலால் உணரக்கூடிய அளவில் உள்ளது என்றும், இது கவனம் தேவைப்படும் நிலை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் மே அல்லது ஜூன் மாதங்களில் இயல்பான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
"தற்போது இருப்பதை விட தென்மேற்குப் பருவமழையின் போது மழைப்பொழிவு குறையக்கூடும்... அதாவது, அது 30% க்கும் அதிகமாகக் குறையலாம். ஆனால் மே மாதம் என்பது பருவமழையின் தொடக்கம் மட்டுமே. மே மற்றும் ஜூன் மாதங்களில் இயல்பான மழைப்பொழிவு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார். இதற்கிடையில், ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் உச்சியில் சூரியன் நேரடியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், பல மாகாணங்களில் உள்ள சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தாலும், தற்போது நிலவும் வறண்ட வானிலை அப்படியே தொடரும் என்று மேலும் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகல மாவட்டத்திலும் மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக்குறியீடு "எச்சரிக்கை" நிலையை எட்டும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக, மக்கள் நாள் முழுவதும் நீரோற்றத்துடன் இருக்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழலில் இருக்கவும், அடிக்கடி ஓய்வெடுக்கவும், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பைக் குறைக்கவும், அத்துடன் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (06) பேருவளை, குருளுவத்த, ரக்வானை, கொடகவெல, உடவளவை மற்றும் தனமல்வில உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
12:13 மணியளவில் குறித்த பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri