மட்டக்களப்பில் மூன்று வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது
மட்டக்களப்பில் தலைமறைவாகி வந்த சந்தேகநபர் ஒருவர் 3 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் 2 வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த நிலையிலேயே இன்று (10.03.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார்.
பொலிஸார் கண்காணிப்பு
அதனையடுத்து, இவர் நீதிமன்ற வழக்கிற்கு முன்னிலையாகாமல் கடந்த 3 வருடங்களாக தலைமறைவாகிய நிலையில் அவருக்கு திறந்த பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்நிலையில், கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாளை கடற்கரை பகுதியில் குடியேறி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவதினமான இன்று காலை அந்தப் பகுதி கடற்கரையில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த பொலிஸார் 3 வருடமாக தலைமறைவாகியிருந்த நபரை கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam