புதுக்குடியிருப்பில் வீதியில் வைத்து இருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்றையதினம் (09.03.2024) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இவர்கள் கஞ்சா மற்றும் ஐஸ் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் இவர்களிடம் இருந்து 880 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை
உடையார்கட்டு குளத்திற்கு செல்லும் வீதியில் வைத்து இராணுவத்தரப்பினை சேர்ந்த ஒருவரும், பொதுமகன் ஒருவருமே இவ்வாறு கஞ்சா பாவித்து கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதுக்குடியிருப்பில் நிலைகொண்டிருக்கும் 68ஆவது படைப்பிரிவின் முதலாவது படை அணியினை சேர்ந்த சிவில் பிரிவு பாதுகாப்பு தரப்பை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் தெரியவருகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

சினிமா வரலாற்றில் சம்பள விஷயத்தில் புதிய முயற்சி எடுத்துள்ள நடிகை சமந்தா.. குவியும் வாழ்த்து Cineulagam
