தையிட்டி விகாரை விவகாரம்: கஜேந்திரகுமார் எம்.பிக்கு நீதிமன்றம் அழைப்பாணை
தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு(Gajendrakumar Ponnambalam) இன்று(11) அழைப்பாணை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்த போது,
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura kumara dissanayake) தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
போலியான பிரசாரம்
இதன் பின்னர் - 'விகாரையை இடிக்க வாரீர்' என்று நான் அழைப்பு விடுத்தது போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட்டு போலியான விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்விடயத்தை அறிந்து, உடனேயே எனது உத்தியோக பூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தினூடாக, குறித்த செய்தி போலியானது என பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பிலும் போலி விளம்பரம் குறித்தும் எனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.
குறித்த விடயத்தை மறுத்து எனது தெளிவுபடுத்தல்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும், இலங்கை பொலிஸாரினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 14ஆம் திகதிக்கு அழைப்புக்கட்டளை எனக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam