திடீர் கள விஜயத்தில் இறங்கிய அமைச்சர் சந்திரசேகர்
கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar), கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று (11) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
திடீர் கள விஜயம்
திணைக்களம் ஊடாக கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, கடற்றொழிலாளர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.
அத்துடன், இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட படகுகளின் நிலை பற்றியும் அமைச்சர் இதன்போது அவதானம் செலுத்தியுள்ளார்.
மேலும், அரசாங்கம் மூலம் கடற்றொழிகளுக்கென வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித தடையுமின்றி உரியவகையில் பெற்றுக்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றியும் அமைச்சர், அதிகாரிகளிடம் வினவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)