லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எரிவாயு நிறுவனத் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவுக்கும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவுக்கும் 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவுக்கும் விற்பனை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையின் விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலையினை திருத்துவதற்கான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயு விலை
இந்த நிலையிலேயே, லிட்ரோ நிறுவனம் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அரசாங்கம் அறிவிக்கும் என நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரையிலும் எரிவாயு விலை திருத்தத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இந்தநிலையிலே, இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan