விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மாலைத்தீவு ஜனாதிபதி
மாலைத்தீவின் (Malaitivu) ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
முக்கிய கலந்துரையாடல்
இதன்போதே, மசூத் இமாத் மாலைத்தீவு ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மாலைத்தீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளை முன்னேற்றுவது குறித்தும் இரு தரப்பினராலும் ஆராயப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri