அநுரவின் கையெழுத்துடன் இதுவரை எந்த நாணயமும் வெளியாகவில்லை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) கையெழுத்துடன் இதுவரை எந்த நாணயமும் வெளியாகவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கையெழுத்து..
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய கடன்களை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் அவர் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த நாட்டிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாக, கடன் பெறவில்லை.
மேலும், புதிதாக பணம் அச்சிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளிலும் உண்மையில்லை. பணத்தை புதிதாக அச்சிடுவதென்றால் ஜனாதிபதியின் கையெழுத்து அவசியம்.

எனினும், இதுவரை ஜனாதிபதியின் கையெழுத்துடன் எந்த நாணயமும் வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri