உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு
இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amid Jayasundara) தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை தொடர்பான பொய்யான தகவல்கள்
பரீட்சை திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான தகவல்களை கவனத்திற் கொள்ள வேண்டாம்.
அத்துடன், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை மாத்திரம் கவனத்திற் கொள்ளுமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri