பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவர் வழக்கில் முக்கிய திருப்பம்
பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவரின் வழக்கு தொடர்பில் புதிய சாட்சியம் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் பொலிஸாரால் பின்தொடர்ந்து வந்த கார் மோதியதாலையே இலங்கை மாணவர் உயிரிழந்ததாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
நாட்டிங்ஹாமின் Trent பல்கலைக்கழக மாணவரான 31 வயது Oshada Jayasundera என்பவர் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி Huntingdon வீதியில் வாகனம் மோதி, சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
தனிப்பட்ட அறிக்கை
குறித்த விவகாரத்தில் Joshua Gregory என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதாலையே விபத்து ஏற்பட்டதாகவும், அது இலங்கை மாணவர் உயிரிழந்தமைக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், Oshada Jayasundera-வின் சகோதரர் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வர இருப்பதாகவும், தீர்ப்பளிக்கப்படும் நாளும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தனிப்பட்ட அறிக்கை அளிக்க இருப்பதாகவும் சட்டத்தரணி ரிச்சர்ட் தாட்சர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தண்டனையை எதிர்கொள்ளும் ஜோசுவா கிரிகோரி நீண்ட காலமாக உளவியல் பாதிப்பை எதிர்கொண்டு வருபவர் என அவரது தரப்பு சட்டத்தரணி வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan