வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை
நுளம்புக்குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிலும் யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே நாளாந்தம் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம்
மாகாண டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் நடைபெற்ற போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 775 டெங்கு நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடம் முழுவதும் யாழ் மாவட்டத்தில் 3986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆறு (06) மரணங்களும் பதிவாகியுள்ளன.
யாழ் மாநகர சபை உள்ளிட்ட ஏனைய உள்ளுராட்சி நிறுவனங்கள் தங்களால் இயன்ற அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக திணைக்களங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கு தாக்கல்
எனினும், பொதுமக்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்..
இந்நிலையில், சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காத 1542 இடங்கள் கடந்த 12 ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 147 இடங்கள் தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களை விட படித்த சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களிலே சூழல் பாதுகாப்பு மிக மோசமாக காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சூழலை சுத்தமாக பேணாது நுளம்பு பரவும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குப்பை தொட்டிகளை வைத்திருத்தல்
இந்த செயற்பாடுகளுக்கு பொலிஸாரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுமாறும், ஒவ்வொரு தெருவிலும் பொதுவான இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து, அதனை உரியவாறு பராமரிக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளில் பொதுமக்களை உள்வாங்கி உள்ளுராட்சி நிறுவனங்கள் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுமக்களும் சமூக பொறுப்புக்களை உணர்த்து செயற்படுவது இன்றியமையாத ஒன்றெனவும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
