இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவும் டெங்கு: எச்சரிக்கும் சுகாதாரத்துறை
இளைஞர், யுவதிகள் மத்தியில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு உள்ளது.
அதிக நோயாளர்கள்
அதன்படி, ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு பதிவாகியுள்ள நோயாளிகளில் 75 சதவீதம் பேர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
டெங்கு ஒரு வைரஸ், எனவே டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரை நுளம்பு கடித்தால், அந்த நுளம்பு மற்றொரு நபரைத் தாக்கும்.
இது முன்னர் சிறு பிள்ளைகளுக்கு பரவி வந்த போதிலும், தற்போது இளைஞர்களிடையே இந்நோய் பரவும் போக்கு அதிகமாக காணப்படுவதாக விசேட நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு ஒழிப்பு
எதிர்வரும் மழைக்காலத்துடன் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் டெங்கு ஒழிப்பு தொடர்பில் சகல துறைகளினதும் அவதானம் அதிகரிக்கப்பட வேண்டுமென ஆனந்த விஜேவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தினாலோ அல்லது சுகாதார திணைக்களத்தினாலோ மாத்திரம் செயற்பட முடியாது எனவே இதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் அவசியமானது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
