சுவிற்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் தொடர்பில் வெளியான தகவல்
சுவிற்சர்லாந்தில்(Switzerland), 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பகுதி வேலையின்மை உதவி நீட்டிப்பு
சில குறிப்பிட்ட துறைகளில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பணியாளர்களுக்கு குறைவான வேலையே இருந்ததால், அவர்களுக்கு 12 மாதங்களுக்கு வேலையின்மை உதவி நிதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல், அவர்கள் அதிகபட்சமாக, 18 மாதங்களுக்கு இந்த நிதி உதவியைக் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
மேலும், ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல், வங்கிகள் படிப்படியாக வட்டி விகிதத்தை குறைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தொடருந்து சேவையில் பாதிப்பு
ஒகஸ்ட் மாதம் முழுவதும், பழுது பார்த்தல் முதலான காரணங்களால் பல்வேறு பாதைகளில் தொடருந்து சேவை பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில், கோடை விடுமுறை முடிந்ததையிட்டு பாடசாலைகள் அமைந்துள்ள மாகாணங்களுக்கு ஏற்ப, ஒகஸ்ட் 9ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 25ஆம் திகதிக்குள் பாடசாலைகள் திறக்கப்பட உள்ளன.
போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில் விடுமுறை முடிந்து நாடு திரும்புவோர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam