ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட 'மொட்டு' கட்சியினர் முயற்சி! : மைத்திரி குற்றச்சாட்டு
"ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடுவதற்கு 'மொட்டு' கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும், ஆனாலும் உண்மைகளைக் கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
"ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமடைந்து வருகின்றது. கட்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், எமது வாய்களுக்குப் பூட்டுபோட்டு, சாவியை 'மொட்டு' கட்சி தலைமையகத்தில் வைப்பதற்கு சிலர் முற்படுகின்றனர்.
இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
உண்மையை வெளிப்படையாகக் கதைப்போம். அநீதிகள் இடம்பெற்றால் அவற்றை
சுட்டிக்காட்டுவோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri