மைத்திரிபால - சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு முன்மொழிந்துள்ளதாக அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி புதிய கூட்டணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், எனினும் சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மாற்றுப் பெயரை பயன்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிமல் லான்சா கூட்டணி
இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணியின் பல முன்னாள் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முன்னாள் அமைச்சர் நிமல் லான்சா தலைமையிலான புதிய கூட்டணியும் இந்த கூட்டணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
