கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் பாலம் சேதம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள முக்கிய பாலம் ஒன்று வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிந்தவூர் - மாட்டுப்பள்ளை பிரதேசத்தில், குறித்த பிரதான வீதியில் இருக்கும் பாலம் இன்றைய முன்னிரவில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக உடைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதை
இதன் காரணமாக கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகன சாரதிகளை மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்கிருந்த நோயாளிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |