மட்டக்களப்பு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடு: தொடரும் பெரும்பான்மையினரின் அராஜகம்
புதிய இணைப்பு
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடுகள் நடாத்தப்பட்டு வரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் (19.10.2023) மயிலத்தடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின் மாடு ஒன்று மீது கொல்லப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேய்ச்சல் தரை பண்ணையாளர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு சட்ட விரோத பயிர்ச்செய்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கால்நடைகள் மீது துப்பாக்கிசூடு
கடந்த மூன்று தினங்களுக்குள் மூன்று கால்நடைகள் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பண்ணையாளர்களின் குடியிருப்புகளும் அண்மையில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களினால் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அப்பகுதியில் புத்தர் சிலையும் வைக்கப்பட்டு சட்ட விரோத
குடியேற்ற செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் சட்ட விரோத காணி
அபகரிப்பாளர்களை வெளியேற்றும் வரையில் போராட்டத்தினை கைவிடப்போவதில்லையென
கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமது மேய்ச்சல் தரை முற்றாக அழிக்கப்பட்டு வருவதுடன் அங்கு புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளாகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் 34வது நாளாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரையினை கோரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் (18.10.2023) மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜேசுதாசன் போராட்ட களத்திற்கு சென்று பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
புத்தர் சிலை
இந்த நிலையில், மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ஒரு தீர்மானத்தினை எடுத்துள்ள நிலையில், வேறு ஒரு தரப்பினர் அப்பகுதியில் புத்தர் சிலைகளை வைத்து தமது மேய்ச்சல் தரையை அபகரிப்பு செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இன்று மயிலத்தமடு,மாதவனை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சுடும் நடாத்தப்படும் நிலையில், அப்பகுதிக்கு சென்றால் தமக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமையே ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னரே நாங்கள் மேய்ச்சல் தரைக்கு கால்நடைகளை கொண்டுசெல்வோம் எனவும் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் வாக்குறுதி
நாங்கள் ஜனாதிபதியின் வாக்குறுதியை இன்றும் நம்புகின்றோம். குறித்த மேய்ச்சல் தரை இல்லையென்றால் 3000 குடும்பங்களின் வாழ்வாதாரமும் இல்லாமல் போய்விடும் நிலைமையே காணப்படுகின்றது.
இன்று மேய்ச்சல் தரையில் விதைப்பு நடவடிக்கைகளும் புத்தர் சிலை நடவடிக்கைகளும் குடியேற்ற நடவடிக்கைகளுமே முன்னெடுக்கப்படுகின்றன.
அங்கு எமக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதான தகவல்கள் இல்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
