கெஹெலிய வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இன்று (11) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஆணைக்குழு தற்போது நடத்தி வருகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில் குறித்த விசாரணையுடன் தொடர்புடைய காரணத்தினால் இந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ராஜபக்ச சுபசிங் பத்திரனகே நிபுனி கிருஷ்ணாஜின என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
