மட்டக்களப்பில் காணியை அபகரிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் காணியொன்றை அபகரிக்க முற்பட்ட குழுவினரை அப்பகுதி மக்களும் மாநகரசபை முதல்வர், உறுப்பினர்கள் தடுத்த சம்பவமொன்று இன்று(11) நடைபெற்றுள்ளது.
பல காலமாக இந்த பகுதியில் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில் அது அப்பகுதி மக்களினாலும் அரசியல்வாதிகளினாலும் தடுக்கப்பட்டு வந்தது.
காணி அபகரிப்பு
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக சிவம்பாக்கியநாதன் கடமையேற்ற நிலையில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவதாக மக்கள் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற மாநகர முதல்வர் அங்கு காணிஅபகரிப்பு முன்னெடுப்படுவதாக தெரிவித்தோரிடம் கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில் இந்த காணிக்கான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்து ஒரு தரப்பினர் இந்த காணியை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடைமுறைகள்
குறித்த காணியானது வெள்ள காலங்களில் கல்லடி பகுதியில் ஏற்படும் வெள்ள நிலைமையினை குறைப்பதற்கான வடிச்சல் பகுதியாக இருந்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அங்குவந்த பொலிஸார் மற்றும் மாநகர முதல்வர்,மாநகரசபை பிரதி முதல்வர், உறுப்பினர்கள் கலந்துரையாடி முறையான அனுமதிகள் கொண்ட ஆவணங்கள் இல்லாமல் காணி அடைப்பதை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்ததுடன் சட்ட நடைமுறைகளை கவனத்தில்கொண்டு செயற்படுமாறும் பணிப்புரை விடுத்துள்ளனர்.




















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
