மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இன்று (11.06.2025) பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரனின் ஒருங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
கிழக்கு மாகாண ஆளுனர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபையின் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சட்டவிரோத மண் அகழ்வு, காட்டு யானை தாக்கம், டெங்கு நோயின் தாக்கம், அரசாங்கத்தின் சத்துணவு திட்டம், வீடமைப்பு திட்டங்கள், போக்குவரத்து, போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டுள்ளன.
புதிய அபிவிருத்தி குழு தலைவர்
முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவராக இருந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் அமைச்சின் வேலைப்பளு காரணமாக மாவட்டத்திற்கு புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 20 நிமிடங்கள் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam